Tag: screwdriver stories
மலரே என்னிடம் மயங்காதே - பாகம் 2
எபிஸோட் - IIIமனதும் அறிவும் பல நேரங்களில் ஒரே பாதையில் பயணிப்பதில்லை. எதிர் எதிர் திசையைத்தான் பெரும்பாலும் தேர்வு செய்கின்றன. மனம் சொல்வதை அறிவு மதிப்பதில்லை. அறிவு உரைப்பதை மனம் அலட்சியமே செய்கிறது. இரண்டுக்கும் இடையில் சிக்கி இழுபடும் நிலைதான் எனக்கும்..!! 'இப்படியே இருக்கப் போகிறாயா.. சோகத்திலிருந்து மீண்டு வா..' என என் அறிவு கிடந்து அலறினாலும், எனது மனம் கண்டு
Read Moreமலரே என்னிடம் மயங்காதே - பாகம் 1
எபிஸோட் - Iகுடையை குண்டூசியால் குத்தி சல்லடையிட்டது மாதிரி, இருள் வானெங்கும் எண்ணிடலங்கா நட்சத்திர ஓட்டைகள்..!! சாலை விளக்குகள் மஞ்சள் நிறத்தில் மந்தமான வெளிச்சத்தை துப்பி, இரவின் இருள் போக்க இயன்ற அளவு முயற்சித்துக் கொண்டிருந்தன. குரைத்த நாயை கண்டுகொள்ளாமல், குறுகலான அந்த சாலைக்குள் நான் காரை திருப்பினேன். குண்டும் குழியுமாய் இருந்த சாலையில் நிதானமாகவே காரை
Read Moreஅசோக் காலிங் அசோக் - பாகம் 3
சீனியர் குப்புற கவிழ்ந்து குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தார். அவர் ஏன் அப்படி அழவேண்டும் என்று எனக்கு சத்தியமாக விளங்கவில்லை. காதலியை கிஸ் அடிக்கையில்.. கையில் அகப்பட்ட அவளுடைய 'கழுக் மொழுக்' பாகம் ஒன்றைப் பிடித்து.. கசக்கிப் பார்த்துவிட்டேன்..!! இது ஒரு குற்றமா..? அதற்கு அவளே ஒன்றும் சொல்லவில்லை. இந்த ஆள் என்னவோ.. இவருக்கு எதையோ பிடித்து கசக்கி விட்ட மாதிரி.. இப்படி
Read Moreஅசோக் காலிங் அசோக் - பாகம் 2
ஒரு ஃபிகரை உஷார் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? சொல்றேன்.. எல்லாம் கேட்டுக்குங்க..!! மொதல்ல டெயிலி குளிக்கணும்..!! காதலுக்கு கண்ணு வேணா இல்லாம இருக்கலாம்.. ஆனா மூக்கு இருக்குது..!! அப்புறம் அந்த ஃபிகர் போற எடத்துக்குலாம் வோடஃபோன் நாய் மாதிரி பின்னாலேயே திரியணும்..!! அது அடிக்கிற மொக்கை ஜோக்குக்குலாம் வெக்கமே இல்லாம சிரிக்கணும்..!! பூ.. மழை.. கவிதை.. கழுதைன்னு அந்த ஃபிகருக்கு
Read Moreஅசோக் காலிங் அசோக் - பாகம் 1
சூரியபகவான் டென்ஷனாகி கொதித்துக் கொண்டிருந்தார். காலையிலிருந்து நடுவானம் வரை நகர்ந்து வந்திருந்தவர், தன் உச்சபட்ச உக்கிரத்தை உலகிடம் காட்டிக் கொண்டிருந்தார். சித்ரலேகா (ஐந்து மாதமாக என் ஆசைக்காதலி) ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டிருந்தாள். நான் (அவளது ஆசைக்காதலன் வீணாப்போன அசோக்) பின்புற இருக்கையில் அமர்ந்திருந்தேன். எனது இரண்டு கைகளாலும் அவளது இடுப்பை இரண்டு புறமும்
Read Moreமாங்கல்யம் தந்துனானே - பாகம் 3
வாழ்வில் என்றுமே இருபக்கம்.. அதில் ஒருபக்கம் துக்கம்..!! நான்கைந்து நாட்களாக சந்தோஷப் பக்கத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நான், விரைவிலேயே அடுத்த பக்கத்தையும் பார்க்க நேர்ந்தது. அதற்கு ஒரு வகையில் காரணமாகவும், தூண்டுகோலாகவும் அன்பரசி வந்து சேர்ந்தாள். அதையெல்லாம் அப்போது அறியாத நான், அவளை உற்சாகமாகவே வரவேற்றேன்."ஹேய்.. அன்பு...!!!!!!!!!! என்னடி இது திடீர்னு வந்து நின்னு
Read Moreமாங்கல்யம் தந்துனானே - பாகம் 2
ச்சே..!! இந்த மனம்தான் எவ்வளவு அவசரக் குடுக்கையாக இருக்கிறது..? ஒருவருடன் பழகாமலேயே.. அவரைப்பற்றி அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ளாமலேயே.. அவருடைய வெளிதோற்றத்தை வைத்து.. மேலோட்டமாய் ஒரு பார்வை மட்டும் பார்த்து.. அவர் மீது விருப்பு கொள்கிறது அல்லது வெறுப்பு உமிழ்கிறது..!! ஏளனம் புரிகிறது அல்லது பொறாமை வளர்க்கிறது..!! அனுதாபம் காட்டுகிறது அல்லது ஆத்திரம் கொட்டுகிறது..!!பிறகு
Read Moreமாங்கல்யம் தந்துனானே - பாகம் 1
வாசலில் கட்டியிருந்த வாழை மரம் கூட, சோர்ந்து போய் மேலும் தலையை தொங்கப் போட்டிருந்தது. பந்தலில் கட்டியிருந்த தோரணங்களில் பாதி உதிர்ந்து போயிருந்தன. கொட்டி வைத்த மணல் மீது ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த வாண்டுகள் எல்லாம், அறைக்குள் முடங்கி அடங்கிப் போயிருந்தன. மாலையிலிருந்து பளீரென்று எரிந்துகொண்டிருந்த குழல் விளக்குகள் கூட, மின்சாரம் நிறுத்தப்பட்டு உறங்க
Read Moreகவிதைக்கு பொய் அழகு..!!
கதீட்ரல் ரோட்டில் இருந்து உள்ளே செல்லும் ஒரு குறுகிய சாலையில், எழுபத்தைந்து சதவிகிதம் முடிவடைந்த நிலையில் நின்றிருக்கிறது அந்த கட்டிடம். எட்டு தளங்கள் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம். ஏழாயிரம் பேர் வசதியாக அமர்ந்து வேலை பார்க்க கூடிய கொள்ளளவு. பகல், இரவு என முழு வீச்சில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று மாதங்களில், ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் ஒரு
Read Moreமேட்ச் பாய்ன்ட்
"மேட்ச் பாய்ன்ட்..!!"சொல்லிவிட்டு அம்பயர் என்னைப் பார்த்து மெலிதாக புன்முறுவல் செய்தார். இவ்வளவு நேரம் இல்லாத ஒரு படபடப்பு, இப்போது என் இதயத்தின் ஒவ்வொரு அணுவிலும் படுவேகத்தில் பரவ ஆரம்பித்தது. விரல்கள் லேசாக நடுக்கம் கொள்ள ஆரம்பித்தன. தலைக்குள் யாரோ அமர்ந்து தபேலா வாசிப்பது மாதிரி இருந்தது. நான் கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன். மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, பின் நிதானமாக
Read More








